
குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
காற்று ;
சுவாசம் பெற
தவம் செய்த போது
வாழ்வாக வந்த
ஆன்மிகம்!
ஒரு சிலுவை
புல்லாங்குழல் ஆன போது
என் இதய துடிப்பில்
இசை தந்த
தெய்வீகம்!
வாழ்வை
படிக்கவும்..
படைக்கவும் ...
வாழும் கலை தந்த
சன்மார்க்கம்!
அறிவும் அருளும் கை கோர்க்கும் போது ஞானம் பிறக்கிறது